செய்திகள்,திரையுலகம் நடிகை வித்யாபாலன் திடீர் கர்ப்பம்!…

நடிகை வித்யாபாலன் திடீர் கர்ப்பம்!…

நடிகை வித்யாபாலன் திடீர் கர்ப்பம்!… post thumbnail image
மும்பை:-தி டர்ட்டி பிக்சர்ஸ் மூலம் தேசிய விருது பெற்ற நடிகை வித்யாபாலன், பின்னர் கஹானி படத்தினால் காத்ரீனா கைப், கரீனா கபூர் மார்க்கெட்டையே நிலைகுலைய வைத்தார். இந்நிலையில் தொழிலதிபர் சித்தார்த்தை திருமணம் செய்துகொண்ட பின்னரும், பாலிவுட்டில் வெற்றி நாயகியாக வலம்வந்து கொண்டிருக்கிறார். தற்போது அவர் கையில் மூன்று திரைப்படங்கள் இருக்கின்றன.

சமீபத்தில் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அடிக்கடி வித்யாபாலன் வருவதாகவும், அவருடன் கணவர் சித்தார்த் ராயும் உடன் வருவதாகவும் தெரிகிறது. கணவர் வரமுடியாத சமயங்களில் வித்யாபாலன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உடன் வருகிறார்கள் என்றும் மும்பை பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை வித்யாபாலன் மறுக்கவில்லை.

எனவே வித்யாபாலன் தனது முதல் குழந்தையை சுமக்கத் தொடங்கிவிட்டார் என்றே பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.வித்யாபாலன் கர்ப்பமாக இருப்பது அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், அவரை வைத்து படமெடுத்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் இந்த செய்தியால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி