செய்திகள் சிறுவர்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு இங்கிலாந்து…

சிறுவர்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு இங்கிலாந்து…

சிறுவர்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு இங்கிலாந்து… post thumbnail image
லண்டன்:-சிறார்களுக்கு பாதுகாப்பில்லாத நாடாக இங்கிலாந்து விளங்கி வருவதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள ஆறி்க்கையில் கூறியிருப்பததாவது:

இங்கிலாந்து நாட்டில் சிறார்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது. நாட்டின் 10 ஆண்களில் ஒரு ஆண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். போலீசாருக்கு வந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் சுமார் 2 ஆயிரத்து 164 பேர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 13 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களே ஆவர். இதனை கருத்தில் கொண்ட இங்கிலாந்து அரசு பாலியல் வன்முறைக்குளாகும் ஆண் சிறுவர்களை பாதுகாக்க திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

இதன்படி வரும் நிதியாண்டு முதல் ஐநூறு ஆயிரம் புவுண்டு நதி ஒதுக்கப்படும். இந்த நிதியின் மூலம் சிறுவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அந்நாட்டின் அமைச்சர் டாமியன் கிரீன் தெரிவித்துள்ளார். அரசின் இம்முடிவிற்கு அனைத்து பிரபலங்களும் ஆதரவு அளித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி