துப்பாக்கி இந்தி ரீமேக்கில் கெளரவ வேடத்தில் நடிக்கும் விஜய்…

விளம்பரங்கள்

சென்னை:-துப்பாக்கி படத்தில் கிளைமாக்ஸில் விஜய்யை பின்தொடர்ந்து வந்து விஜய் இருக்கும் படகுக்கு வெடிகுண்டு வைப்பார் அவருடைய நண்பர் ஒருவர். இந்த கேரக்டரில் இந்தி துப்பாக்கி ரீமேக்கில் நடிக்கிறார் விஜய்.

வெறும் ஐந்து நிமிடங்களே வரும் இந்த கேரக்டர், விஜய்க்காக இன்னும் கொஞ்சம் டெவலப் செய்ய முடிவு செய்யப்படுகிறது. ஒரிஜினல் துப்பாக்கியில் இந்த கேரக்டர், வெடிகுண்டை வைத்துவிட்டு திரும்பிவிடுவார். ஆனால் இந்தி ரீமேக்கில் நடிக்கும் விஜய்,அக்ஷய் குமாருக்கு உதவியாக ஆக்ஷன் காட்சிகளிலும் நடிப்பதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.துப்பாக்கி இந்தியில் ஹாலிடே என்ற பெயரில் தயாராகி வருகிறது. அக்ஷயகுமார், சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்துவிட்டது.

ரூ.75 கோடியில் பிரமாண்டமாக தயாராகி வரும் ஹாலிடே, வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. கண்டிப்பாக இந்த படம் ரூ.100கோடி ரூபாய் பட லிஸ்ட்டில் இணைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி பாலிவுட்டில் நல்ல வசூல் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: