ராகுலுக்காக ஆபாச ‘போஸ்’ கொடுத்த நடிகை…

விளம்பரங்கள்

மும்பை:-பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு ஆதரவாக, பாலிவுட் நடிகை மேக்னா படேல் என்பவர், அரை குறை ஆடையுடன், ஆபாச பிரசாரம் செய்தார்.

அதைப்போல, காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுலுக்கு, லோக்சபா தேர்தலில் ஆதரவளிக்குமாறு, மும்பையை சேர்ந்த நடிகை, தனிஷா சிங் என்பவர், ஆபாச, “போஸ்’ கொடுத்துள்ளார். கழுத்துக்கு கீழ் முதல் இடுப்புக்கு கீழ் வரை, ராகுலின் படத்தை வைத்து, உடல் பாகங்களை மறைத்தவாறு, நடிகை தனிஷா சிங், ஆபாச போஸ் கொடுக்கும் படங்கள், வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

மற்றொரு படத்தில், தனிஷா, ராகுலின் படத்தை கட்டித் தழுவியவாறு உள்ளார்.இந்தப் படங்களைப் பார்த்த, காங்கிரஸ் தலைவர்கள், “கட்சிக்கு சம்பந்தம் இல்லாத நடிகை தனிஷா, தனக்கு விளம்பரம் தேடிக் கொள்வதற்காக, இது போல் செய்துள்ளார்’ என, தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: