அசினுக்கு ரூ.7 கோடி கொடுத்த அழகு சாதன நிறுவனம்!…

விளம்பரங்கள்

சென்னை:-அமெரிக்காவில் பிரபல அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் Avon. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் சுமார் 11 பில்லியன் டாலருக்கு வர்த்தகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் தற்போது இந்தியாவின் வர்த்தகம் செய்ய முன்வந்துள்ளது. அதற்கான விளம்பர தூதராக அசின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு இந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ள அசின், இந்த நிறுவனத்திடம் இருந்து மிகப்பெரிய தொகையை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஒரு வருடத்துக்கு இந்த பதவியில் இருக்க அவர் வாங்கியிருக்கும் தொகை ரூ.7 கோடி என்று கூறப்படுகிறது இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அசின், Avon நிறுவனத்துக்கு விளம்பர தூதராக என்னை நியமித்துள்ளது உண்மைதான் என்றும், விரைவில் தமிழ் மற்றும் இந்தியில் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

நல்ல கேரக்டர் அமைந்தால் எந்த நடிகர்களுடனும் நடிக்க தான் தயாராக இருப்பதாகவும் கூறிய அசின், இனிமேல் ஒப்புக்கொள்ளும் படங்களில் தன்னுடைய கேரக்டரின் முக்கியத்துவத்தை அறிந்த பின்னர்தான் ஒப்புக்கொள்ள இருப்பதாக கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: