செய்திகள்,திரையுலகம் விஜய்க்கு 22 கோடி,ஏ.ஆர். முருகதாஸுக்கு 18 கோடி சம்பளம்…

விஜய்க்கு 22 கோடி,ஏ.ஆர். முருகதாஸுக்கு 18 கோடி சம்பளம்…

விஜய்க்கு 22 கோடி,ஏ.ஆர். முருகதாஸுக்கு 18 கோடி சம்பளம்… post thumbnail image
சென்னை:-‘துப்பாக்கி’யின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ்,விஜய் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஐங்கரன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.ஆரம்பித்த புதிதில் ஃப்ரெஸ்ஸாக பட வேலைகளை முடுக்கி விட்ட ஐயங்கரன் நிறுவனம் இப்போது படத்தின் பட்ஜெட் கன்னா பின்னாவென்று எகிற ஆரம்பித்திருப்பதால் நம்மால் பட்ஜெட்டை தாக்குபிடிக்க முடியுமா? என்று சந்தேகம் கொள்ள ஆரம்பித்துள்ளது. அதற்கு விஜய்யின் சம்பளம் ஒரு காரணமாக இருந்தாலும், மிக முக்கிய காரணம் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் தானாம்.

படத்தில் நடிப்பதற்காக விஜய்க்கு 22 கோடி ரூபாய் சம்பளமும், டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு 18 கோடி ரூபாய் சம்பளமும் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருடைய சம்பளம் மட்டுமே 40 கோடியாகி விட்டது.இதுபோக கேமராமேன், இசையமைப்பாளர், எடிட்டர், பாடலாசிரியர் என்று இதர முன்னணி டெக்னிஷியன்களின் சம்பளத்தையும் சேர்த்தால் அது ஒரு 30 கோடியை தொட்டு விடும். மேலும் படத்தில் விஜய்க்கு இரட்டைவேடம், கிராபிக்ஸ் காட்சிகள், குத்தாட்டம், இரண்டு ஹீரோயின்களின் சம்பளம், கொல்கத்தாவில் ஒருநாளைக்கு படப்பிடிப்பை நடத்த 3 லட்சம் ரூபாய் வாடகை மொத்தம் 90 நாட்கள் படப்பிடிப்பு என சுமார் 100 கோடி வரை பட்ஜெட்டை நீட்ட அதைப்பார்த்த தயாரிப்பாளர் கருணாமூர்த்திக்கு தலையே சுத்தி விட்டதாம்.இதனால் ஆரம்பித்த படத்தை நிறுத்தவும் முடியாமல், செலவாகும் 100 கோடியை எப்படி ரிட்டன் எடுப்பது என்ற வழியும் தெரியாமல் முழு பிதுங்கி நிற்கிறது ஐயங்கரன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி