செய்திகள்,திரையுலகம்,விளையாட்டு பிரபல நடிகையின் சகோதரி திடீர் மரணம்…

பிரபல நடிகையின் சகோதரி திடீர் மரணம்…

பிரபல நடிகையின் சகோதரி திடீர் மரணம்… post thumbnail image
லாஸ் ஏஞ்சல்ஸ்:-அமெரிக்காவில் வசிக்கும் பிரபல ஆலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ்(46). ஆஸ்கார் விருது பெற்றவர். இவருடைய சகோதரர் எரிக் என்பவரும் நடிகர் ஆவார். இவர்களுடைய ஒன்றுவிட்ட சகோதரியான நான்சி மோடிஸ் (37) லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்சி தனது வீட்டிலுள்ள குளியல் அறை தொட்டியில் பிணமாக கிடந்தார். அந்த பாத் டப்பில் தண்ணீர் நிரம்பி இருந்தது.

பிறகு நான்சியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள். வீட்டில் இருந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். இது அவரால் எழுதப்பட்ட தற்கொலை கடிதமா? என்ற சந்தேகம் இருக்கிறது. தற்செயலாக அதிக அளவில் மாத்திரை சாப்பிட்டதால் இறந்தாரா? அல்லது தற்கொலையா? என்ற சந்தேகமும் நிலவுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்க 8 வாரம் முதல் 10 வாரம் ஆகலாம். அதன்பிறகே நான்சியின் சாவு குறித்த மர்மம் அகலும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையில் நான்சியின் மரணம் தங்களுக்கு பெரிய அதிர்ச்சியும், வேதனையும் தருவதாக நடிகை ஜூலியா, நடிகர் எரிக் மற்றும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி