நடிகர் விஜய்யை அழைத்து கெளரவப்படுத்திய ஃபேஸ்புக் நிறுவனம்…

விளம்பரங்கள்

ஐதராபாத்:-ஐதராபாத்தில் உள்ள ஃபேஸ்புக் நிறுவன அலுவலகம் விஜய்யை அழைத்து கெளரவப்படுத்த அவருக்கு சென்ற வாரம் அழைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட விஜய்,ஏ.ஆர்.முருகதாஸின் பிசியான படப்பிடிப்புக்கு இடையில் ஐதராபாத் ஃபேஸ்புக் அலுவலகம் வந்தார். அவரை ஃபேஸ்புக் நிறுவன ஊழியர்கள் அன்புடன் வரவேற்றனர்.

ஃபேஸ்புக் நிறுவன ஊழியர்கள் மற்றும் விழாவில் கலந்து கொண்ட பலர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு ஆட்டோகிராப் வாங்கினர். ஃபேஸ்புக் வரலாற்றில் முதல்முறையாக ஒரு நடிகரை சிறப்பு விருந்தினராக அழைத்தது விஜய்யைத்தான் என்று கூறப்படுகிறது. விரைவில் விஜய், இதுகுறித்து புதிதாக ஃபேஸ்புக் பக்கம் ஒன்றை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து தனது மேனேஜர் தயாரிக்கும் சிம்புதேவன் படத்திலும், அதையடுத்து அட்லி படத்திலும் நடிக்கவுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: