கௌதம் மேனன் படத்தில் அஜீத் சீரியல் கில்லர்?…

விளம்பரங்கள்

சென்னை:-அடுத்ததாக அஜீத் நடிக்கப்போவது கௌதம் மேனன் படத்தில்.பொதுவாக கௌதம் மேனன் ஹீரோக்களை அழகாகவே காட்டுவார்.இந்த படத்திலும் அஜீத்தை இதுவரை இல்லாத அளவிற்கு அழகான புதிய தோற்றத்தில் காட்ட இருக்கிறாராம் இயக்குனர்.

மேலும் தற்போது கிடைத்த தகவலின் படி ‪கெளதம்மேனன்‬ படத்துல தல சீரியல் கில்லராம் அந்த கொலைகளை கண்டு பிடிக்க வாறாங்க அனுஷ்கா. கார்த்திக் யாருங்கிறது தான் படத்தோட ட்விஸ்டாம். கார்த்திக்குக்கும் அஜித் அளவுக்கு மெயின் ரோலாம். செக்கண்ட் ஹீரோன்னே சொல்லலாமாம். மேலும் தற்போது முதல் கட்டமாக சால்ட் அண்ட் பெப்பர் லுக் கை மாற்ற போகிறாராம் . இணையதளத்திலிருந்தும், பிரபல ஓவியர்களை கொண்டும் பல வித தோற்றங்களை பிரதியெடுத்து அதில் இருந்து சிலவற்றை தேர்வு செய்து அஜீத்திடம் கொடுத்துள்ளார்.

அதில் ஒன்றை தேர்வு செய்திருக்கிறார் அஜீத். இப்போது அந்த தோற்றத்திற்கு மாறி வருகிறார். அதனால் நண்பர்களை சந்திப்பது பொது இடத்தில் தோன்றுதை தவிர்த்து வருகிறார். அனேகமாக கௌதம் மேனன் படம் முடியும் வரை வெளியில் வரமாட்டார் என்கிறார்கள். படப்பிடிப்பு முழுமையாக முடியும் வரை அஜீத்தின் தோற்றம் பற்றியும், கதை பற்றியும் ரகசியம் காக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: