செய்திகள்,விளையாட்டு மேலாடை ஜிப் அணியாமல் ஸ்கேட்டிங் விளையாடிய வீராங்கனை…

மேலாடை ஜிப் அணியாமல் ஸ்கேட்டிங் விளையாடிய வீராங்கனை…

மேலாடை ஜிப் அணியாமல் ஸ்கேட்டிங் விளையாடிய வீராங்கனை… post thumbnail image
சோச்சி:-ரஷியாவிலுள்ள சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஸ்கேட்டிங் விளையாட்டில் கலந்து கொண்ட ரஷ்யா வீராங்கனை ஓல்கா கிராப் தனது மேலாடையின் ஜிப்பை சரியாக அணியாமல் விளையாடினார்.இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீராங்கனை உள்ளாடை எதுவும் அணியாமல் அவ்வாறு விளையாடியது எல்லோரையும் முகம் சுழிக்க வைத்தது.

ஆனால் வீரங்கனையோ ஸ்கேட்டிங் 3000 மீட்டர் விளையாட்டில் வெங்கல பதக்கம் வென்றார். தனது மேலாடையின் ஜிப் சரியாக மூடப்படாமல் தெரியாமலேயே வீராங்கனை மிகவும் ஆர்வமாக விளையாடியுள்ளார். பின்னர் உணர்ந்து கொண்டு விரைவாக சிரித்துக் கொண்டு ஜிப்பை சரியாக மூடி கொண்டார்.

இது தொடர்பாக வீராங்கனை பேசுகையில் இந்த வீடியோ ஒருவேளை யூடியூப்பில் வெளியாகலாம். ஆனால் இது மிகவும் வருத்தமாக அமையும் என்று நான் எண்ணவில்லை என்று கூறியுள்ளார். இதற்கிடையே பதக்கம் வென்ற அந்த வீராங்கனையை ரஷ்யா நாட்டு அதிபர் விளாடிமீர் புதின் பாராட்டியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி