செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல். ஒப்பந்த விதிமுறை மீறல்: சென்னை சூப்பர் கிங்ஸ் நீக்கப்படுமா?…

ஐ.பி.எல். ஒப்பந்த விதிமுறை மீறல்: சென்னை சூப்பர் கிங்ஸ் நீக்கப்படுமா?…

ஐ.பி.எல். ஒப்பந்த விதிமுறை மீறல்: சென்னை சூப்பர் கிங்ஸ் நீக்கப்படுமா?… post thumbnail image
புதுடெல்லி:-ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து நீதிபதி முகுல் முட்கல் குழுவின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் பெட்டிங்கில் ஈடுபட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அணியின் உள் விவரங்களை தெரிவித்து இருக்கிறார்.இது குறித்து அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

குருநாத் மெய்யப்பன் அணியின் தகவல்களை கூறி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பெட்டிங்கில் ஈடுபட்டது நிரூபணமாகி உள்ளது. அவர் மேட்ச்பிக்சிங் செய்தாரா என்பது பற்றி மேலும் விசாரணை செய்ய வேண்டும்.அவர் அணி நிர்வாகியாக செயல்பட்டார். அவரை கட்டுப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் தவறி விட்டது. அவர் ஐ.பி.எல். விதிமுறைகளை மீறியுள்ளார்.குருநாத் மெய்யப்பன் மீதோ அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதோ என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டுத்தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாத் மெய்யப்பன் பெட்டிங்கில் ஈடுபட்டது நிரூபணமானதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐ.பி.எல். அணி உரிமை யாளர்களுக்கான ஒப்பந்தத்தை சென்னை அணி மீறியது. இதனால் சென்னை அணியின் ஒப்பந்தம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அணி ஐ.பி.எல்.லில் இருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி