செய்திகள்,திரையுலகம் ரகுமான்,ஹாரிஸ் ஜெயராஜ் இருவரையும் திட்டிய இயக்குனர்…

ரகுமான்,ஹாரிஸ் ஜெயராஜ் இருவரையும் திட்டிய இயக்குனர்…

ரகுமான்,ஹாரிஸ் ஜெயராஜ் இருவரையும் திட்டிய இயக்குனர்… post thumbnail image
சென்னை:-தென் மேற்கு பருவகாற்று, நீர்பறவை போன்ற படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. அவர் கூறியதாவது: படங்களுக்கு ஸ்கிரிப்ட் எவ்வளவு முக்கியமோ அதுபோல் இசையும் முக்கியம்.

அந்த காலத்தில் எம்ஜிஆர் படங்களுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். அதேநேரத்தில் சிறுபட தயாரிப்பாளர்களின் படங்களுக்கும் இசை அமைத்தார். அதேபோல் இளையராஜாவும் பணியாற்றுகிறார். ஆனால் மற்றொருபோக்கும் நிலவுகிறது. ஏ.ஆர்.ரகுமான் அல்லது ஹாரிஸ் ஜெயராஜ் போன்றவர்கள் சிறு பட்ஜெட் படங்களுக்கு இசை அமைப்பதில்லை.ஏனென்றால் அவர்களது சம்பளமும் படத்தை தயாரிக்க ஆகும் முதலீடும் ஒரே அளவில் இருப்பதுதான். பெரிய இசை அமைப்பாளர்கள் சிறுபட்ஜெட் படங்களுக்கு இசை அமைத்தால் அது ரசிகர்களின் கவனத்தை கவரும்.

படத்தை பார்க்கும் ஆர்வம் அவர்களுக்குள் ஏற்படும். ஆனால் அந்த எண்ணம் அந்த இசை அமைப்பாளர்களிடம் நிலவுகிறதா? சிறுபட்ஜெட் படங்களுக்கு ஸ்கிரிப்ட் முக்கியம்.அதில் இசையும் நல்லபடியாக உள்ளது. குறிப்பிட்ட இசை அமைப்பாளர்கள் தங்களது போக்கை மாற்றிக்கொண்டு சிறுபட்ஜெட் படங்களுக்கும் அதற்கேற்ற சம்பளத்தை பெற்றுக்கொண்டு இசை அமைக்க முன்வரவேண்டும். இவ்வாறு இயக்குனர் சீனு ராமசாமி கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி