செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் சினிமா படங்கள் தான் பாலியல் வன்முறைகளை தூண்டுகிறதா?…

சினிமா படங்கள் தான் பாலியல் வன்முறைகளை தூண்டுகிறதா?…

சினிமா படங்கள் தான் பாலியல் வன்முறைகளை தூண்டுகிறதா?… post thumbnail image
இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடங்களில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யபடுவதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கின்றது. இதற்கு சினிமாக்களில் பெண்களின் கதாபத்திரங்கள் வடிவமைக்கபடுவதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

கடந்த 2012 டிசம்பரில் 23 வயது நிரம்ப்பிய மருத்துவக்கல்லூரி மாணவி டெல்லியில் ஓடும் பஸ்ஸில் ஒரு கும்பலால் கற்பழிக்கபட்டு கொலை செய்யப்பட்டாள். அது உலகையே உலுக்கியது. இது குறித்து பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் சாருகான் டுவிட்டரில் வெளியிட்டு இருந்த தகவலில் “நான் மிகவும் வருந்துகிறேன் நான் இந்த சமூகத்தின் மற்றும் பண்பாட்டின் ஒரு அங்கம் நான் ஒரு மனிதன் என்ற நிலையில் மிகவும் வருந்துகிறேன். என்று கூறி இருந்தார்.பாலியல் வன்முறை இந்தியாவில் பரவாலாக நடைபெறுவதை பல்வேறு சம்பவங்கள் சுட்டுகாட்டுகிறது. கடந்த மாதம் மேற்கு வங்காளத்தில் ஒரு டாக்சி டிரைவரின் மகள் ஒரு கும்பலால் கற்பழிக்கபட்டு கொலை செய்யபட்ட்டார்.

இந்தியாவின் தேசிய குற்ற பதிவு கழக அறிக்கையில் இந்தியாவில் ஓவ்வொரு 22 நிமிடங்களிலும் ஒரு பெண் கற்பழிக்கபடுவதாக கூறப்பட்டு உள்ளது
இது போன்ற பாலியல் வன்முறைகளுக்கு இந்தியாவின் சினிமா படங்கள் தூண்டுதலாக உள்ளனவா?இந்திய சினிமாவில் பெண்களின் கதாபாத்திரம் சித்தரிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என சில ஊக்குவிக்கும் அறிகுறிகள் தெரிகின்றன ஆனால் இந்திய இயக்குனர் மீரா நாயர் கூறும் போது இவ்வாறு அடிக்கடி நடக்கும் இழிவான செயலை பார்த்தால் பாலிவுட் படங்களில் பெண்களின் கதாபாத்திரங்கள் மகிழ்ச்சிதரக்கூடியதாக இல்லை என கூறினார்.குறிப்பாக மிகவும் கவலைஅளிக்க கூடியது ஐட்டம் நம்ப்பர் என அறிக்ககூடிய குத்துப்பாட்டு பாடல்கள். அசிங்கமான் அங்க அசைவுகள், பாலியல் உணர்வை தூண்டும் இசை நிகழ்ச்சிகள் இவை வாடிக்கையாக பாலிவுட்ட் படங்களில் உள்ளன.சிலர் ஐட்டம் நம்பரை பார்ப்பதையே பொழுதுபோக்காக கொண்டு உள்ளனர்.ஆனால் மீரா நாயாரின் பார்வை வித்தியாசமானது.வெகுஜன சினிமாவில் பாலிவுட்டின் புதிதாக வரும் நடிகையை ஆடவைத்து அனேக ஆண்கள் கூடி நிற்பது ம் அவர் தனது நடனத்தால் மக்கய்வது போன்றும் உள்ளது. உண்மையில் நான் கேட்கிறேன்.இது ஆண்கள் பெண்கள் இடையே மரியாதை தொடர்பை ஏற்படுத்து கிறது என்பதை நான் ஏற்கவில்லை என்று கூறினார்.

பாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களுள் ஒருவரான, அமீர் கான், முற்போக்கான சமூக நல செயலகளைவிட இதுபோன்ற மறைவான விஷயங்களை கலையவேண்டும் என்ற கவலை இருக்கிறது. சில நாகரீகமான விஷயங்கள் மற்றும் நல்ல வியங்களும் படங்களில் உள்ளன, “என்று கூறினார்.நான் மிக தெளிவாக இருக்கிறேன்.இந்தியாவில் பெண்கள் சிதக்கப்படுவதற்கு சினிமா எந்தவகையிலும் காரணமாக இருக்காது , அவ்வாறு கூறுபவர்கள் குறுகிய கண்ணோட்டம் உள்ளவர்கள் என ஷாருகான் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி