இந்தியாவின் வெற்றிக்கு தேவை 320 ரன்கள்…

விளம்பரங்கள்

ஆக்லாந்து:-நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆக்லாந்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 503 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து 373 ரன்கள் பின்தங்கியிருந்தது. ரோகித் சர்மா (67), ரகானே (23) அவுட்டாகாமல் இருந்தனர். மூன்றாவது நாள் ஆட்டம் அரைமணி நேரம் முன்பு துவங்கப்பட்டது.

முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு, ரகானே (26) தாக்குபிடிக்கவில்லை. அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ரோகித் சர்மா (72) அவுட்டானார். பின் வந்த கேப்டன் தோனியை (10) வாக்னர் வெளியேற்றினார். தொடர்ந்து வேகத்தில் மிரட்டிய வாக்னர், பின்வரிசை வீரர்களான ஜாகிர் கான் (14), முகமது ஷமி (2) விட்டுவைக்கவில்லை. எதிர்முனையில் இஷாந்த் சர்மாவை ‘டக்’ அவுட்டாக்க, இந்திய அணி வெறும் 72 ரன்கள் மட்டும் சேர்த்த நிலையில், முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டானது’.இதையடுத்து 301 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய நியூசிலாந்து அணி ஷமி வேகத்தில் ஆட்டம் கண்டது. இவர் வீசிய போட்டயின் முதல் ஓவரின் கடைசி பந்தில் ரூதர்போர்டு ‘டக்’ அவுட்டானார்.

தொடர்ந்து இவரது அடுத்த ஓவரில் மற்றொரு துவக்க வீரர் புல்டனை (5) வெளியேற்றினார். வில்லியசன் (3) ஜாகிர் கான் பந்தில் ஜடேஜாவின் மிரட்டல் ‘கேட்ச்சில்’ அவுட்டானார். பின் வந்த கேப்டன் பிரண்டன் மெக்கலம் (3) ரன் அவுட்டாக, உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 15 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.தொடர்ந்து வந்த நியூசிலாந்து அணிக்கு கோரி ஆண்டர்சன் (2) ஏமாற்றினார். பின் வாட்லிங் கம்பெனி கொடுக்க, எதிர்முனையில் அவ்வப்போது பவுண்டரி அடித்த ராஸ் டெய்லர் (41) ஓரளவு கைகொடுத்தார். தொடர்ந்து வந்த சவுத்தி (14) ரவிந்திர ஜடேஜாவின் ‘சுழல்’ வலையில் சிக்கினார். வாட்லிங் (11), சோதி (0) ஆகியோர் இஷாந்த் சர்மா வேகத்தில்அவுட்டாக, நியூசிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்சில் 105 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டனாது’. இதையடுத்து இந்திய அணிக்கு 407 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க வீரர் முரளி விஜய் (13) ஏமாற்றம் அளித்தார். பின் தவானுடன் ஜோடி சேர்ந்த புஜாரா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது. தவான் (49), புஜாரா (22) அவுட்டாகாமல் இருந்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: