செய்திகள் டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமான பனிப்பாறை உருகுகிறது…

டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமான பனிப்பாறை உருகுகிறது…

டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமான பனிப்பாறை உருகுகிறது… post thumbnail image
கிரீன்லேண்ட்:-இங்கிலாந்தில் உள்ள சவுத்ஹாம்ப்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்குக்கு கடந்த 1912–ம் ஆண்டு ஏப்ரல் 10–ந்தேதி டைட்டானிக் சொகுசு கப்பல் புறப்பட்டு சென்றது. அதில், 2224 பயணிகளும், கப்பல் சிப்பந்திகளும் இருந்தனர்.

ஏப்ரல் 15–ந்தேதி வடக்கு அட்லாண்டிக் கடலில் கிரீன்லேண்ட் பகுதியில் கப்பல் சென்று கொண்டிருந்தது.அப்போது ஐகோப்ஷவ்ன் என்ற பனிப்பாறையில் மோதி சேதம் அடைந்தது. இதனால் கப்பலுக்குள் தண்ணீர் புகுந்து டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கியது.இந்த விபத்தில் 1500 பேர் கடலில் மூழ்கி பலியாகினர்.இச்சம்பவம் நடந்து சுமார் 102 ஆண்டுகள் ஆகிறது.இந்த நிலையில் டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமாக இருந்த ஐகோப்ஷ்வன் பனிப்பாறை கடந்த 40 ஆண்டுகளாக உருகி வருகிறது. தொடக்கத்தில் அது மிக மெல்ல உருகியது.

தற்போது அது வேகமாக உருகி நகர்ந்து செல்கிறது. கடந்த கோடை காலத்தில் இருந்து தற்போது வரை உருகி இது சுமார் 17 கி.மீட்டர் தூரம் நகர்ந்துள்ளது. அதாவது இது நாள் ஒன்றுக்கு தலா 46 மீட்டர் தூரம் நகர்கிறது.இப்பனிப்பாறை வேகமாக உருகி நகர்வதால் அட்லாண்டிக் கடலின் நீர்மட்டமும் உயரும் அபாயம் உள்ளது. இந்த தகவலை வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் இயான் ஜவுகின் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி