செய்திகள்,திரையுலகம் ஜாக்கி சானின் ‘போலீஸ் ஸ்டோரி 6’ ரூ.400 கோடி வசூலித்து சாதனை…

ஜாக்கி சானின் ‘போலீஸ் ஸ்டோரி 6’ ரூ.400 கோடி வசூலித்து சாதனை…

ஜாக்கி சானின் ‘போலீஸ் ஸ்டோரி 6’ ரூ.400 கோடி வசூலித்து சாதனை… post thumbnail image
சென்னை:-ஜாக்கிசான் நடித்த ‘போலீஸ் ஸ்டோரி’ படத்தின் 6–வது பாகம் சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சமீபத்தில் திரைக்கு வந்தது. அதில், சீனாவில் மட்டும் இந்த படம் ரூ.400 கோடி வசூல் செய்து இருக்கிறது.

இந்த படத்தில் ஜாக்கிசான் போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார். ஆட்சியாளர்களை பணிய வைக்க ஜாக்கிசானின் மகள் உள்பட 33 பேர்களை சர்வதேச தீவிரவாதிகள் கடத்தி விடுகிறார்கள். அந்த 33 பேர்களையும் தீவிரவாதிகளிடம் இருந்து ஜாக்கிசான் எப்படி காப்பாற்றுகிறார்? என்பதே கதை.முதன்முதலாக ஜாக்கிசான் சொந்த குரலில், ஒரு பாடலை பாடியிருக்கிறார். தமிழ்நாட்டில் இந்த படத்தை சுரபி பிலிம்ஸ் மோகன் வெளியிடுகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி