செய்திகள்,திரையுலகம் சூப்பர் ஸ்டாருடன் மோதும் சனாகான்…

சூப்பர் ஸ்டாருடன் மோதும் சனாகான்…

சூப்பர் ஸ்டாருடன் மோதும் சனாகான்… post thumbnail image
சென்னை:-சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, ஆயிரம் விளக்கு நடிகையின் டைரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனா கான். கவர்ச்சியை தாராளமாக காட்டியும் கோலிவுட்டில் அவரால் நிரந்தர இடம்பிடிக்க முடியவில்லை. பாலிவுட் பட வாய்ப்பை நம்பி மும்பை சென்றவருக்கு அங்கும் ஏமாற்றமே நிலவியது.

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடத்திய பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். இதையடுத்து அவருக்கு தான் நடிக்கும் ஜெய் ஹோ படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார் சல்மான். மகிழ்ச்சியில் மிதந்த சனா கான் அவரை புகழ்ந்து தள்ளினார். அன்று புகழ்ந்த சனா இன்று சல்மான் மீது கோபம் அடைந்திருக்கிறாராம். ஜெய் ஹோவில் டெய்ஸி ஷாவும் நடித்திருக்கிறார்.அவர் வந்தபிறகு சனாவுக்கு தரும் முக்கியத்துவத்தை சல்மான் நிறுத்திக்கொண்டார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு சனாவை அழைக்காமல் புறக்கணித்துவிட்டார் சல்மான்.

அத்துடன் பட விளம்பர போஸ்டர்களிலும் அவரது போட்டோவை போடவில்லை. படத்திலும் இவரது காட்சிகள் வெட்டப்பட்டுவிட்டதுடன் இடைவேளைக்கு முன் ஒரு காட்சியில் தோன்றுவதுபோல் மட்டும் சீன் உள்ளதாம்.சல்மான் மீதான சனாவின் கோபத்துக்கு இதுதான் காரணமாம். இந்த கோபத்தை மனசுக்குள்ளே புதைத்து வைத்திருக்கிறார். வெளியில் சொல்லவும் முடியாமல், மறக்கவும் முடியாமல் தவிக்கும் சனா இந்த விஷயத்தை தனது தோழிகள் மூலம் மீடியா காதில் விழும்படி செய்திருக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி