கமலுக்கு கால்ஷீட் தர மறுத்த ஸ்ருதிஹாசன்…

விளம்பரங்கள்

சென்னை:-கமலுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படத்தை டிராப் செய்துவிட்டோ அல்லது மற்ற படங்களின் கால்ஷீட் அட்ஜெஸ்ட் செய்தோ ஓகே சொல்லும் ஹீரோயின்கள் பலர் உள்ளனர்.

மகள் ஸ்ருதியோ தன்னை நேரில் சந்தித்து கால்ஷீட் கேட்டும் கமலுக்கு நோ சொல்லிவிட்டார். இதுபற்றி ஸ்ருதி ஹாசன் கூறியதாவது: உண்மையிலேயே இப்போது என் வாழ்க்கையை எனது சொந்த விஷயத்துக்காக கூட வாழ முடியவில்லை. எல்லா நேரமும் நடிப்புக்காகவே செலவிடுகிறேன்.ஒரு வேடத்துக்கு பிறகு மற்றொரு வேடம் போட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கடந்த புத்தாண்டு தினத்தையொட்டி 2 நாள் ஓய்வு எடுத்தேன். அதன்பிறகு இடைவிடாமல் பிஸியாகவே இருக் கிறேன்.

இதை தவிர வேறு எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. என் அப்பா என்னுடன் பணியாற்ற முன்வந்தார். சமீபத்தில் என்னை சந்தித்து கால்ஷீட் கேட்டார். ஆனால் கால்ஷீட் இல்லாததால் மறுத்து விட்டேன். பிஸியாக இருக்கும் இந்த நேரத்தில் எனக்கு வேறு எந்த வேலை செய்யவும் அவகாசம் கிடைப்பதில்லை. தோழிகளிடம் அரட்டை அடிக்கக்கூட நேரம் கிடையாது. இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: