இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை கொலை செய்த பெண்ணுக்கு மரண தண்டனை…

விளம்பரங்கள்

அமெரிக்கா:-அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்த சுசன்னா பாசோ என்பவரது கணவர் லூயிஸ் முசோ. லூயிஸ் முசோ மிகப்பெரிய தொகைக்கு தன்னை இன்சூரன்ஸ் செய்திருந்தார். இதையறிந்த இவரது மனைவி சூசன்னா, இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக கணவர் லூயிஸை கொலை செய்ய முடிவு செய்தார். பின்னர் ஒரு நாளில் யாருக்கும் தெரியாமல் கொலை செய்து பிணத்தை கால்வாயில் போட்டுவிட்டார்.

டெக்சாஸ் மாநில போலீஸார் இந்த கொலை குறித்து தீவிர புலன்விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் சுசன்னா, முன்னுக்கு பின் முரணான சில தகவல்களை கூறியதால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அவரை ரகசியமாக கண்காணித்த போலீஸார், அவர்தான் கொலை செய்தார் என்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரித்தபோது, அவர் கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது,. அவரது சார்பில் வாதாடிய வழக்கறிஞர், மனநிலை சரியில்லாத நிலையில் அவர் இந்த கொலையை செய்துவிட்டதாக வாதாடினர். ஆனால் நீதிமன்றம் அவரது வாதத்தை ஏற்றுக்கொள்ளாமல் அவருக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு கொடுத்தது. நேற்று சுசன்னா பாசோவுக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர் அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் மரண தண்டனை பெறும் 14 வது பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: