செய்திகள்,திரையுலகம் விடிய விடிய அரட்டையடித்த நயன்தாரா- த்ரிஷா…

விடிய விடிய அரட்டையடித்த நயன்தாரா- த்ரிஷா…

விடிய விடிய அரட்டையடித்த நயன்தாரா- த்ரிஷா… post thumbnail image
சென்னை:-த்ரிஷாவும், நயன்தாராவும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் திரையுலகிற்கு வந்தனர். த்ரிஷா 2002ஆம் ஆண்டு அறிமுகமானார். ஒரு வருடம் கழித்து நயன்தாரா அறிமுகம் ஆனார். இருவரும் சேர்ந்து ஒரு படம் கூட நடிக்கவில்லை எனினும் இருவரும் நீண்ட காலமாக தோழிகளாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனையோ புதுமுகங்கள் வந்து கவர்ச்சி காட்டி நடித்தாலும் இருவரது மார்க்கெட்டை அசைக்க முடியவில்லை. தற்போது கூட இருவரும் பிசியாகத்தான் உள்ளனர். இந்நிலையில் நேற்று நீண்ட இடைவெளிக்கு பின்னர் இருவரும் சந்தித்து தங்கள் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

ஒரு விருந்தில் கலந்து கொண்ட த்ரிஷா மற்றும் நயன்தாரா, விருந்து நிகழ்ச்சி முடிந்த பின்னரும் இரவு வெகுநேரமாக சிரித்து பேசிக்கொண்டதாக விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கவர்ச்சி நடிகை தெரிவித்தார். அதிகாலையில்தான் இருவரும் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியுடன் கட்டிபிடித்து தங்கள் அன்பை வெளிப்படுத்திவிட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி