அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஜெயலலிதா பிரதமரானால் சந்தோஷம்-கருணாநிதி…

ஜெயலலிதா பிரதமரானால் சந்தோஷம்-கருணாநிதி…

ஜெயலலிதா பிரதமரானால் சந்தோஷம்-கருணாநிதி… post thumbnail image
சென்னை:- ”மூன்றாவது அணி சார்பில், முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால், சந்தோஷம்,” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.அவரது பேட்டி:-

ஆம் ஆத்மி‘ சார்பில், பிரசாந்த் பூஷண் அளித்த பேட்டியில், ஜாபர் சேட் பேசிய டேப்பை வெளியிட்டிருக்கிறார். கலைஞர், ‘டிவி’யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி, ஆவணங்களையெல்லாம் திருத்தியிருக்கிறார் என்றெல்லாம் சொல்லியிருக்கிறாரே?

எல்லாம் பொய்.

உங்கள் மீது குற்றச்சாட்டு சொல்லியிருக்கிறாரே?

நீங்கள் எல்லாம் செய்தியாளர்கள் தானே; சொத்து குவிப்பு வழக்கு ஒன்று நடைபெறுகிறது. அதில் சம்பந்தப்பட்டவர்களிடம் சென்று, இதைப் போல நீங்கள் இவ்வாறு கேள்வி கேட்க முடியுமா?முதல்வரை, இதைப் போல, நீங்கள் காண முடியுமா? ‘பவானிசிங் என்ற வழக்கறிஞர் தொடர வேண்டும் என, கேட்பது முறையா’ என, யாராவது கேட்டீர்களா?அவர் குற்றவாளிக்கு எதிராக, வாதாட வேண்டியவர். ஆதரவாகப் பேசிக் கொண்டிருக்கிறார். அதைப் பற்றியெல்லாம் யாராவது கேட்டீர்களா?

உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு கூறும் போது, மற்றவர்கள் மீது குற்றஞ்சாட்டுவது சரியா?

தமிழகத்தில் ஒரு சில செய்தியாளர்கள், இப்படி நடந்து கொள்வதால், அவர்களின் கலாசாரம், இந்த அளவிற்கு ஆகி விட்டதால், நான் இதை கேட்க நேர்ந்தது.

நீங்களும் ஒரு நிருபராக இருந்தவர் ஆயிற்றே… இப்படி சொல்லலாமா?

அதனால் தான் இதுவரை உங்களை மதித்து நடந்து கொண்டு வருகிறேன்; இப்போதும் மதிக்கிறேன். அதனால் தான், அங்கே நின்று கொண்டிருந்த உங்களையெல்லாம், அருகே அழைத்துப் பேசுகிறேன்.

தமிழக டி.ஜி.பி., ராமானுஜம் பதவிக் காலத்தை நீடித்திருக்கின்றனரே… என்ன காரணம்?

அது பற்றி எனக்கு தெரியாது.

மூன்றாவது அணியின் சார்பில் ஜெயலலிதா, இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அவர் வெற்றி பெற்றால் பிரதமர் ஆவார் என்றும் சொல்லப்படுகிறதே?

ஆனால், சந்தோஷம்.இவ்வாறு, கருணாநிதி கூறினார்.

அழகிரி மீது போடப்பட்ட பொய் வழக்கு:கருணாநிதி விளக்கம்:

அழகிரி மீது தொடுக்கப்பட்டுள்ள பொய் வழக்கு குறித்து, அன்றைய பிரதமர் வாஜ்பாய், துணை பிரதமர் அத்வானிக்கு கடிதம் எழுதினேன்’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:முன்னாள் தி.மு.க., அமைச்சர், தா.கிருஷ்ணன் மறைவுக்காக, நாங்கள் ரத்தக் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில், அ.தி.மு.க., அரசின், அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு, அவரின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன், அழகிரி இல்லத்திற்குள் நூற்றுக்கணக்கான போலீசார் நுழைந்தனர். ‘தா.கிருஷ்ணன் கொலை தொடர்பாக, விசாரணை நடத்த வேண்டும்’ எனக்கூறி, கைது செய்து, அழைத்துச் செல்ல முற்பட்டனர்.அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்கள், ‘போலீஸ் அராஜகம் ஒழிக’ என, முழக்கமிட்டு, வேனிற்கு முன், கீழே படுத்து மறித்தனர் ஆனால், அவர்களை, அழகிரியே, அமைதிப்படுத்தி விட்டு, போலீசாருடன் புறப்பட்டு சென்றார்.

நிருபர்கள், அழகிரியிடம் கேட்ட போது, ‘ அ.தி.மு.க., ஆட்சியாளர்களின் பொய் வழக்கை, நீதிமன்றம் மூலம் சந்திப்பேன்’ என்றார்.நிருபர்கள், அழகிரி கைது பற்றி என்னிடம் கேட்ட போது, ‘உண்மையான குற்றவாளிகளைப் பிடித்திருந்தால், அது வரவேற்கத்தக்கது. பாவம் ஓரிடம் என்ற நிலையிலோ; ஒரு கல்லில், இரண்டு மாங்காய் அடிப்பது என்ற நிலையிலோ நடவடிக்கை அமையுமானால், அது, உண்மையான குற்றவாளிகளைப் தப்பிக்க விடுவதோடு நேர்மையான நீதி கிடைப்பதற்கு, வழியில்லாத தடைக்கல்லாகவும் ஆகிவிடும்’ என்றேன்.அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கும், துணை பிரதமர் அத்வானிக்கும், ‘தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்கு போடுவது, பழிவாங்கும் போக்கு, அதிகார துஷ்பிரயோகம் தொடர்கதையாக உள்ளது’ என, விரிவாக கடிதம் எழுதினேன்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி