ரஜினியுடன் மோதும் வடிவேலு…

விளம்பரங்கள்

சென்னை:-நீண்ட இடைவெளிக்குப் பிறகு காமெடி நடிகர் வடிவேலு நடித்து வரும் புதிய படம் ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’. ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ என்ற முழு நீள நகைச்சுவை படத்திற்கு பிறகு சரித்திர வேடத்தில் வடிவேலு நடித்து வரும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடித்து வெளிவரும் படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பும் உள்ளது.இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில், இப்படத்தை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி வரும் சித்திரை திங்களில் இப்படத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து, வடிவேலு தனது டுவிட்டரில் பக்கத்தில், சித்திரை திங்களில் ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்பராக்… பராக்… என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே, ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் ஏப்ரல் 11-ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் இவருடைய படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: