பாலாவின் அடுத்த படத்தில் நாயகியாக ஸ்ரேயா தேர்வு…

விளம்பரங்கள்

சென்னை:-ஸ்ரேயா சில வருடங்களுக்கு முன்பு தமிழில் முன்னணி நடிகையாக இருந்தார். ரஜினி ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்தார். விஜய், விக்ரம், தனுஷ், ஜீவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தெலுங்கிலும் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார்.

ஆனால் சமீப காலமாக இளம் நடிகைகள் வரத்து அதிகம் இருந்ததால் ஸ்ரேயாவால் தொடர்ந்து மார்க்கெட்டை தக்க வைக்க முடியவில்லை. மூத்த ஹீரோக்கள்கூட இளம் நடிகைகளையே ஜோடியாக்க பிரியப்பட்டனர். இதனால் ஸ்ரேயா மார்க்கெட் சரிந்தது. தமிழில் அவருக்கு படங்கள் இல்லை. டைரக்டர்கள் முழுமையாக ஒதுக்கி விட்டனர்.கடைசியாக ஜீவா ஜோடியாக நடித்த ‘ரௌத்திரம்’ படம் 2011ல் வந்தது. அதே வருடம் ராஜபாட்டை படத்தில் விக்ரமுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். அதன் பிறகு தமிழில் நடிக்கவில்லை. சமீபத்தில் கன்னடத்தில் நடித்த சந்திரா படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டனர்.

தமிழ் திரையுலகத்தினர் கைவிட்ட ஸ்ரேயாவை பாலா மீண்டும் அழைத்து கரகாட்டத்தை மையமாக வைத்து எடுத்து வரும் படத்தில் கதாநாயகியாக்கியுள்ளார். ஸ்ரேயா சிறந்த பரத நாட்டிய டான்சர். இந்த படத்துக்கு நடனம் தெரிந்தவர் தேவை என்பதால் ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: