நடிகர் வீட்டில் ‘ஹெராயின்’ சிக்கியது…

விளம்பரங்கள்

நியூயார்க்:-பிரபல ஹாலிவுட் நடிகர் பிலிப் சிமோர் ஹாப்மேன் (46). இவர் ‘மிஷன் இம்பாசிபில்–3’, ‘போகி நைட்ஸ்’, ‘பிக் லெபோஸ்கி’ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இவர் அமெரிக்காவில் நியூயார்க் அருகேயுள்ள மேன் ஹாட்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையாக இருந்தார். அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் அதில் இருந்து அவரால் மீள முடியவில்லை.இந்நிலையில் மேன் ஹாட்டனில் உள்ள தனது வீட்டின் குளியலறையில் ஹாப் பிணமாக கிடந்தார். அவரது கையில் போதை மருந்து ஏற்றி குத்தப்பட்ட நிலையில் ஊசி இருந்தது. எனவே அவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து செலுத்தியதால் மரணம் அடைந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

அவரது பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் ஹாப்மேனின் படுக்கையறையை சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது ஹாப்மேன் மறைத்து வைத்திருந்த 65 பாக்கெட் ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: