‘ஐ போன்’ வெடித்து மாணவிக்கு காயம்…

விளம்பரங்கள்

நியூயார்க்:-அமெரிக்காவில் மைனே பகுதியில் உள்ள கென்னெ பங்க்ஸ் நகரில் நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 8–வது வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளிக்கு ‘ஐ போன்’ கொண்டு வந்திருந்தார்.

அதை தனது சட்டை பையில் வைத்திருந்தார். வகுப்பறையில் இருந்த போது அந்த ‘ஐ போன்’ திடீரென வெடித்து தீப்பிடித்தது.இதனால் மாணவி அலறியதால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. உடனே, உடையில் பிடித்த தீயை ஆசிரியர்கள் அணைத்தனர். இதில், மாணவியின் தொடை மற்றும் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது.எனவே, அவளை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: