இம்மாத இறுதியில் விஸ்வரூபம் 2 ரிலீஸ்?…

விளம்பரங்கள்

சென்னை:-விஸ்வரூபம் 2ம் பாகம் இயக்கி நடித்து வந்தார் கமல்ஹாசன். கடந்த ஆண்டே இப்படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் ரிலீஸ் ஆகவில்லை. அதேபோல் ரஜினி நடிக்கும் கோச்சடையான் படமும் ரிலீஸுக்கு தயாராகி வந்தது.

ஒரு கட்டத்தில் 2 படமும் ஒரே நாளில் வெளியாகும் என்று கூறப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு படங்களின் ஷூட்டிங் முடிந்து நீண்ட நாள் ஆகிவிட்ட நிலையில் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாமல் இருந்தது. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியானால் வசூல் பாதிக்கும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து ரஜினி, கமல் இருவருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து படம் ரிலீஸ் தொடர்பாக இறுதி முடிவு எடுக்காமல் இருந்து வந்தனர். தற்போது கோச்சடையான் படம் வரும் ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ரஜினியின் 2வது மகள் சவுந்தர்யா டைரக்டு செய்திருக்கிறார். மோஷன் கேப்சர் முறையில் இப்படம் அனிமேஷனில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

தீபிகா படுகோன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படத்துக்கு முன்னதாகவே அதாவது இந்த மாதமே விஸ்வரூபம் 2ம் பாகத்தை வெளியிடும் வேலையில் கமல் மும்முரமாக இருக்கிறார். இதில் பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: