செய்திகள்,திரையுலகம் முன்னாள் அமைச்சர் தயாரிக்கும் படத்தில் மீண்டும் அஜீத்- தமன்னா ஜோடி…

முன்னாள் அமைச்சர் தயாரிக்கும் படத்தில் மீண்டும் அஜீத்- தமன்னா ஜோடி…

முன்னாள் அமைச்சர் தயாரிக்கும் படத்தில் மீண்டும் அஜீத்- தமன்னா ஜோடி… post thumbnail image
சென்னை:-அஜீத் தற்போது கவுதம் மேனன் படத்தில் நடிக்க தன்னை தயார்படுத்தி வருகிறார். இந்த படத்தில் அஜீத்துடன் அனுஷ்கா முதல்முறையாக நடிக்கிறார். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் சிறுத்தை சிவா நடிப்பில் மீண்டும் ஒரு படம் நடிக்க அஜீத் விருப்பம் தெரிவித்துள்ளார். வீரம் படம் போல் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் இதில் மீண்டும் தமன்னாவே அஜீத்துக்கு ஜோடியாக நடிப்பார் என கூறப்படுகிறது.

அஜீத், தமன்னா, சிறுத்தை சிவா என மூவரும் மீண்டும் இணையும் இந்த படத்தை தயாரிக்க முன்னாள் அமைச்சர் ஒருவர் முன்வந்துள்ளார். இதுகுறித்த முறையான அறிவிப்பு வரும் விரைவில் வரும் என சிறுத்தை சிவா கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி