செய்திகள்,திரையுலகம் சிம்புவின் ‘வாலு’ பட டீசர் சாதனை…

சிம்புவின் ‘வாலு’ பட டீசர் சாதனை…

சிம்புவின் ‘வாலு’ பட டீசர் சாதனை… post thumbnail image
சென்னை:-இன்று சிம்புவின் பிறந்தநாள். தனது பிறந்தநாளில் வாலு படத்தின் டீஸர் ஒன்றை வெளியிடுவதாக ஏற்கனவே சிம்பு அறிவித்திருந்தார். அதன்படி இன்று யூ ஆர் மை டார்லிங் என்று தொடங்கும் பாடலின் டீஸரை இணையத்தில் சற்று முன்னர் வெளியிட்டுள்ளார் சிம்பு.

வெளியான ஒருமணி நேரத்தில் சுமார் 17,000 பேர்களுக்கு மேல் அந்த டீஸரை யூ டியூபில் பார்த்ததாக கூறப்படுகிறது.ஹன்சிகாவுடன் மோதலில் இருக்கும் சிம்பு, மீண்டும் சமாதானம் ஆவதற்காகவே தனது பிறந்தநாளில் இந்த டீஸரை வெளியிட்டுள்ளார் என்று அவரது நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து கூறப்படுகிறது.

இந்த டீஸரில் நயன்தாராவும் வேண்டாம், ஆண்ட்ரியாவும் வேண்டாம், தீபிகாவும் வேண்டாம், யாருமே வேண்டாம் நீ மட்டும் போதும் டார்லிங் என்று தொடங்கி வருகிறது. சிம்புவின் ரசிகர்கள் மிக ஆவலுடன் இந்த டீஸரை கேட்டு வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி