செய்திகள்,விளையாட்டு ரஞ்சி கோப்பை 7வது முறையாக கர்நாடகா சாம்பியன்…

ரஞ்சி கோப்பை 7வது முறையாக கர்நாடகா சாம்பியன்…

ரஞ்சி கோப்பை 7வது முறையாக கர்நாடகா சாம்பியன்… post thumbnail image
ஐதராபாத்:-ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி ஐதராபாத்தில் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இதில் மகாராஷ்டிரா- கர்நாடகம் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.

டாஸ் வென்ற மகாராஷ்டிரா பேட்டிங் தேர்வு செய்து. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய மகராஷ்டிரா முதல் இன்னிங்கில் 305 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. அந்த அணியின் பாவ்னே அதிகபட்சமா 89 ரன் சேர்த்தார்.பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய கர்நாடகம் 515 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ராகுல், கணேஷ் சதீஷ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். 210 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய மகாராஷ்டிரா 4-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன் எடுத்திருந்தது.

இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 366 ரன்கள் எடுத்து மகாராஷ்டிரா ஆட்டம் இழந்தது. ஜாதவ் சதம் அடித்தார்.
இதனால் கர்நாடக அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி