செய்திகள்,திரையுலகம் மாலை நேரப் பூக்கள் திரை விமர்சனம்…

மாலை நேரப் பூக்கள் திரை விமர்சனம்…

மாலை நேரப் பூக்கள் திரை விமர்சனம்… post thumbnail image
நாயகி நிஷா தன் தோழி ஷோபியாவுடன் வெளியூரில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். ஒரு நாள் நிஷா, நாயகன் ரவியின் நண்பன் செல்போன் கடைக்குச் சென்று ரீசார்ஜ் செய்கிறார்.

ரவி தன் நண்பன் கடையில் ரீசார்ஜ் செய்யும் பெண்களின் எண்களை எடுத்து ராங் கால் மாதிரி பேசி பெண்களிடம் பழகி அவர்களை ஏமாற்றும் குணம் கொண்டவர். அந்த வகையில், நிஷாவின் செல்போன் எண்ணை எடுத்து அவருக்கு ராங் கால் மாதிரி பேசி கடலை போடுகிறார். நிஷாவும் அவர் யார் என்று தெரியாமலே பேசுகிறார்.இந்த ராங் கால் நட்பு வலுவாக… தினமும் ரவியுடன் 24 மணி நேரமும் போனில் பேசிக்கொண்டே இருக்கிறார் நிஷா. இதனால் தோழி ஷோபியா கடுப்பாகி நிஷாவை திட்டுகிறார். ஒருநாள் ரவியும் நிஷாவும் முதன்முதலாக சந்திக்கிறார்கள். அங்கு நிஷா நாம் பேசுவதை நிறுத்திக் கொள்ளலாம். என் தோழிக்கு பிடிக்கவில்லை என்று கூறுகிறார். அதற்கு ரவி, ‘எனக்கும் இந்த காதல் எல்லாம் பிடிக்காது. எனவே, என்னை நண்பனாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று சொல்லி ஒரு குட்டிக் கதையை கூறுகிறார். அந்த கதையை கேட்ட நிஷா அவன் மீது காதல் வயப்படுகிறார்.

இருவரும் காதலித்து வருகிறார்கள். ஒருநாள் நிஷா, ரவியை வீட்டிற்கு வரவழைக்கிறார். அங்கு தன் தோழி ஷோபியாவை அறிமுகம் செய்து வைக்கிறார். அப்போது திடீரென்று கரண்ட் கட்டாகிறது. மெழுகுவர்த்தி எடுக்கப்போன சிறிது இடைவெளியில் ரவியும் நிஷாவும் படுக்கையறைக்கு சென்று தவறு செய்கிறார்கள். இதை ஷோபியா பார்த்து விடுகிறார்.இதற்கிடையில் ரவி வேறொரு பெண்ணான பிரியாவை தன் வலையில் விழ வைக்க, அதே குட்டிக்கதையை சொல்லி ஏமாற்றுகிறார். இந்த விஷயம் நிஷாவிற்கு தெரிந்து விடுகிறது. இதனால் ரவியுடன் பேசுவதை தவிர்க்கிறார். நிஷாவை சமாதானம் செய்ய ரவி, நிஷாவிற்கு அடிக்கடி போன் செய்கிறார். அதை ஷோபியா எடுத்து பேசுகிறார். இதனால் ஷோபியாவிற்கும் ரவிக்கும் தொடர்பு ஏற்படுகிறது.இப்படி பெண்களை அடுத்தடுத்து ஏமாற்றும் ரவி இறுதியில் யாருடன் சேர்ந்தார்? என்ன ஆனார்? என்பதே மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் சுதாகருக்கு, பெண்களை வசியம் செய்து ஏமாற்றுவதற்கு ஏற்ற முகபாவனை உள்ளது. மற்றபடி இப்படத்தில் நடித்திருப்பவர்கள் நடிப்பு என்னும் பெயரில் ஏதோ செய்கிறார்கள். நாயகிகளுக்கு நடிப்பே வரவில்லை. கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.பெற்றோர்களின் வளர்ப்பு இல்லாமல் இளைஞர்கள் வாழ்ந்தால் எப்படி வாழ்வார்கள் என்ற கதையை ரசிகர்களிடம் கொண்டு செல்வதற்காக, கவர்ச்சி, காமம் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக திணித்திருக்கிறார் இயக்குனர். சிறு பட்ஜெட் படங்கள் வெற்றியடைந்து வரும் சூழ்நிலையில், இதுபோன்ற படங்கள் வெளிவந்து இளைஞர்களையும் சினிமா உலகத்தினரையும் சீரழிக்கிறார்கள். படத்தில் இசை என்னும் பெயரில் எல்லாப்படத்தின் பிண்ணனி இசையையும் போட்டு பார்ப்பவர்களை கடுப்பேத்துகிறார். நீண்ட காட்சிகள், லாஜிக் இல்லாத காட்சிகளை வைத்து இயக்குனர் ஏமாற்றி இருக்கிறார்.மொத்தத்தில் ‘மாலை நேரப் பூக்கள்’ வாடி விட்டன…

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி