சிவகார்த்திகேயனின் சம்பளம் 8 கோடி!…

விளம்பரங்கள்

சென்னை:-மெரினா, எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று தொடர்ச்சியாக ஹிட் படங்களைக் கொடுத்து வருவதால் சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டைத் தேடிப்போகும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

ஜி நீங்க ஒரு வருஷம் தள்ளி கூட டேட்ஸ் குடுங்க பிரச்சனையில்லை ஆனா எனக்கு ஒரே ஒரு படம் பண்ணிக் குடுத்தாப் போதும் என்பது தான் சிவகார்த்திகேயனை கமிட் செய்யப் போகும் தயாரிப்பாளர்கள் அவரிடம் வைக்கும் முக்கியமான கோரிக்கையாம்.இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷனில் ‘மான் கராத்தே’ படத்தில் நடித்து வரும் சிவகார்த்தியேன் அடுத்த படத்தை இன்னும் கமிட் செய்யவில்லை.தற்போது 2 முதல் 4 கோடி வரை சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஒருவேளை இந்தப் படமும் ஹிட்டாகி விட்டால் தற்போது வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தில் இன்னும் சில கோடிகளை அதிகரித்து விடலாம் என்ற திட்டம் தான் அதற்கு காரணமாம்.

ஆனால் சிவகார்த்திகேயனை தேடி வரும் தயாரிப்பாளர்களோ உங்களோட சம்பளத்தை 8 கோடியா கூட வாங்கிக்கங்க, ப்ளீஸ் என்று விடாமல் துரத்துகிறார்கள்.இதனால் கோடிகளில் கொழிக்கும் ஹீரோ சிவகார்த்திகேயனை பார்த்து கோலிவுட்டின் சக இளம் ஹீரோக்களே பொறாமையில் இருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: