செய்திகள்,திரையுலகம் DTH இல் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் பீட்சா…

DTH இல் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் பீட்சா…

DTH இல் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் பீட்சா… post thumbnail image
சென்னை:-விஸ்வரூபம் படத்தை கமல்ஹாசன் முதல்முறையாக DTH தொழில்நுட்பத்தில் ரிலீஸ் செய்ய பெரும் முயற்சி செய்தார். ஆனால் தியேட்டர் அதிபர்களின் கடும் கண்டனத்தால் அந்த முயற்சியை கைவிட்டுவிட்டார் கமல்.

ஆனால் தற்போது பீட்சா படத்தை தமிழின் முதல்படமாக DTH வடிவில் வெளியிட எடுத்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தை அமெரிக்கா, கனடா, மலேசியா, இஸ்ரேல், மொரீஷியஸ், ஜிம்பாவே, தைவான், தாய்லாந்து முதலிய நாடுகளில் உள்ள மக்கள் தங்கள் தொலைக்காட்சியில் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி பீட்சா படத்தை பார்க்கலாம். 5.1 சவுண்ட் எபெக்ட்டில் ஒளிபரப்பாகும் இந்த முயற்சிக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த படத்திற்கு ஆங்கில சப்டைட்டிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றதால் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்த இந்த படம் வெகுவிரைவில் உலகம் முழுவதும் DTHல் வெளிவர உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி