செய்திகள்,திரையுலகம் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட ரூ.25 லட்சம் கேட்ட நடிகை…

ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட ரூ.25 லட்சம் கேட்ட நடிகை…

ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட ரூ.25 லட்சம் கேட்ட நடிகை… post thumbnail image
சென்னை:-விஸ்வரூபம் படத்தில் இயக்குனர் கமல்ஹாசனிடம் உதவியாளராக பணிபுரிந்த இயக்குனர் சாக்ரோட்ஸ் இயக்கிய பிரம்மன் படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. இந்த படத்தில் சசிகுமார், லாவண்யா திரிபாதி, சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவாகிய இந்த படம் விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த படத்தில் முதல்முறையாக சந்தானமும் சூரியும் இணைந்து காமெடி செய்துள்ளார்கள். ஆனால் இருவருக்கும் சேர்ந்தால்போல் ஒரு காட்சி கூட இல்லையாம். இடைவேளை வரை சந்தானமும், அதன்பின்னர் சூரியும் காமெடி ரோலில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் நாயகி லாவண்யா திரிபாதி உத்தர்கண்ட் மாநிலத்தில் நடந்த மாநில அளவிலான அழகிப்போட்டியில் முதல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவான ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட நடிகை ஆண்ட்ரியாவிடம் கேட்டபோது, ரூ.25 லட்சம் சம்பளம் கேட்டாராம். அவரே அந்த பாடலை பாடி ,ஆடியும் கொடுத்ததால், அவர் கேட்ட தொகையை கேள்விப்பட்டு முதலில் தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்தாலும், பின்னர் வேறு வழியின்றி கொடுக்க சம்மதித்து விட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி