ஷங்கர்,ரஜினி இணையும் படத்தின் பட்ஜெட் 250 கோடி…

விளம்பரங்கள்

சென்னை:-‘கோச்சடையான்’ எப்போது ரிலீசாகும் என்று ரஜினிக்கே தெரியவில்லை. அதற்காக அவருடைய அடுத்த படத்தை முடிவு செய்யாமல் இருக்க முடியுமா என்ன?

கே.வி.ஆனந்த், கே.எஸ்.ரவிக்குமார், சுரேஷ்கிருஷ்ணா என்று பல பிரபலங்களும் அவரது பெஸ்ட் லிஸ்ட்டில் இருந்தாலும் ரஜினியின் சாய்ஸ் என்னவோ டைரக்டர் ஷங்கராகத்தான் உள்ளது.‘சிவாஜி’, ‘எந்திரன்’ என்று இரண்டு மாஸ் ஹிட்டுகளைக் கொடுத்த ஷங்கருடன் மீண்டும் இணைய முடிவு செய்த ரஜினிக்கு ஷங்கரின் பிரம்மாண்டத்துக்கு யார் தாக்கு பிடிப்பது என்பது தான் ஒரே கவலையாக இருந்துள்ளது.
தமிழ்சினிமாவில் பல கோடிகளை ஒரே படத்தில் கொட்டக்கூடிய அளவுக்கு வசதி படைத்தவர் இப்போதைக்கு கல்பாத்தி எஸ். அகோரம் தான்.

அப்படிப்பட்டவரிடம் கேட்டுப் பார்த்தால் என்ன என்று யோசனை தோன்ற கல்பாத்தியும் ஷங்கர்-ரஜினி காம்பினேஷன் என்றதும் உடனே ஓ.கே சொல்லியிருக்கிறார்.
ஆனால் ஷங்கர் சொன்ன பட்ஜெட்டை கேட்டதும் மிரண்டு போன அகோரம் “என்னால சன் பிக்சர்ஸ் ரேஞ்சுக்கெல்லாம் தாக்கு பிடிக்க முடியாது. நீங்க சொன்ன பட்ஜெட்ல பாதி வேணும்னா நான் தயாரிக்க தயாரா இருக்கேன்” என்று சொல்லியிருக்கிறார்.ஷங்கர் அப்படி என்ன பட்ஜெட் சொன்னார்?அதிகமில்லீங்க ஜஸ்ட்’ 250 கோடி‘ தான்!

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: