அசினை கழற்றி விட்ட விஜய்…

விளம்பரங்கள்

சென்னை:-விஜய்யுடன் சிவகாசி, போக்கிரி, காவலன் படங்களில் நடித்தவர் அசின். இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. இந்திக்கு சென்ற அசின், அங்கு பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.

இதையடுத்து விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க அவர் விரும்பினார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என அவர் கணக்கு போட்டார். முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில் நடிக்க அசின் ரகசியமாக தூது விட்டார்.ஆனால் தனது படத்தில் இதுவரை தனக்கு ஜோடி சேராத சமந்தா நடித்தால் நன்றாக இருக்கும் என விஜய் விரும்பினார். அதனால் அசின் வேண்டாம் என விஜய் தரப்பு சொல்லிவிட்டதாம்.

இதை அறிந்து அசின் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். ஆனால் அதை வெளிக்காட்டாமல், இப்போதைக்கு விளம்பர படங்களில் கூட நான் பிசியாகவே இருக்கிறேன். தமிழில் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என கூறியுள்ளார் அசின்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: