செய்திகள் மவுத் வாஷ் கிருமிநாசினிகளை தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு…

மவுத் வாஷ் கிருமிநாசினிகளை தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு…

மவுத் வாஷ் கிருமிநாசினிகளை தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு… post thumbnail image
லண்டன்:-மவுத்-வாஷ் போன்ற கிருமிநாசினிகளின் உபயோகம் குறித்த புதிய ஆய்வு ஒன்றினை சமீபத்தில் குவீன் மேரி என்ற லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியையான அம்ரிதா அலுவாலியா வெளியிட்டிருந்தார். இதில் அவர் தொடர்ந்து இதனை உபயோகிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய கிருமிநாசினிகள் நல்ல பாக்டீரியாக்களை அழித்துவிடுவதால் ரத்த அழுத்தம் உயர்வதற்கான வாய்ப்புகள் தோன்றுகின்றன என்றும் உயரும் இந்த ரத்த அழுத்தம் இதயநோய் மற்றும் பக்கவாதம் ஆகிய நோய்களின் தாக்கத்தினையும், இறப்பு விகிதத்தினையும் அதிகரிப்பதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.இந்த ஆய்வின்படி ரத்த அழுத்த அளவின் உயரும் ஒவ்வொரு இரண்டு புள்ளிகளுக்கும் இதய நோயினால் இறப்பதற்கான வாய்ப்பு 7 சதவிகிதமும், பக்கவாதத்தினால் இறப்பதற்கான வாய்ப்பு 10 சதவிகிதமும் அதிகரிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஆராய்ச்சி சுகாதாரமான 19 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. ‘கோர்சோடில்’ என்ற கிருமிநாசினியை அவர்கள் தினமும் இரண்டுமுறை வாய் கொப்பளிக்க உபயோகித்தனர்.குறிப்பிட்ட காலத்திற்குப்பின் சோதனையிடப்பட்டபோது அவர்களின் ரத்த அழுத்தம் 2-3.5 அளவுகள் உயர்ந்திருந்தது கண்டறியப்பட்டது. கோர்சோடில்லைத் தயாரிக்கும் கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் நிறுவனம் தங்களது தயாரிப்பு பற்களிலும், ஈறுகளிலும் ஏற்படும் பிரச்சினைகளுக்காக உபயோகிக்கப்படும் ஒரு குறைந்த காலத் தயாரிப்பு என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த கிருமிநாசினியில் கலந்துள்ள 0.2 சதவிகிதத்திற்கான குளோர்ஹெக்சிடைன் என்ற வேதிப்பொருள் உடலில் நைட்ரேட் சுரப்பதற்குக் காரணமான பாக்டீரியாக்களைக் கொல்லுகின்றது என்றும், இரத்த நாளங்கள் சரிவர செயல்பட இந்த நைட்ரேட் சுரப்பு இன்றியமையாதது என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
பற்களில் தொற்றுநோய் ஏற்படும்போது உபயோகிக்கப்படவேண்டிய இந்தக் கிருமிநாசினிகளை மற்றவர்கள் உபயோகிப்பது குறித்து சிந்திக்கவேண்டும் என்பதை விளக்குவதான இந்த ஆய்வு தீவிர உயிரியல் மற்றும் மருத்துவம் என்ற நூலிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி