செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு இந்தியாவுக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு…

இந்தியாவுக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு…

இந்தியாவுக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு… post thumbnail image
வெலிங்டன்:-இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 4 ஆட்டங்கள் முடிந்து உள்ளது. இதில் 3–0 என்ற கணக்கில் நியூசிலாந்து தொடரை கைப்பற்றிவிட்டது. முதல், 2 மற்றும் 4–வது போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 3–வது போட்டி ‘டை’ ஆனது.

5–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று வெலிங்டனில் நடந்தது. இந்திய அணியில் கடந்த போட்டியில் நீக்கப்பட்ட தொடக்க வீரர் ஷிகார் தவான் இந்தப்போட்டியில் இடம் பிடித்தார். ஸ்டூவர்ட் பின்னி கழற்றிவிடப்பட்டார்.டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த தொடரில் அனைத்து ஆட்டத்திலும் டோனியே டாஸ் வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நியூசிலாந்து தொடக்க வீரர்களாக குப்தில், ஜேசி ரைடர் களம் இறங்கினர். ரைடர் 17 ரன்னில் புவனேஸ்வர்குமார் பந்தில் அவுட் ஆனார். அடுத்து மற்றொரு தொடக்க வீரர் குப்தில் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை வருண் ஆரோன் கைப்பற்றினார்.அதன்பின் வில்லியம்சன்– டெய்லர் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஒன்று, இரண்டு என்று ரன்களை சேர்த்த அவர்கள் ஏதுவான பந்துகளை விரட்டினர்.

இருவரும் தங்களது அரை சதத்தை பூர்த்தி செய்தனர். இந்த ஜோடியை வருண் ஆரோன் பிரித்தார். அவரது பந்தில் வில்லியம்சன் அவுட் ஆனார். அவர் 88 ரன் (8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். இந்த ஜோடி 3–வது விக்கெட்டுக்கு 152 ரன் (25.1 ஓவர்) சேர்த்தது. அப்போது நியூசிலாந்து 193 ரன் எடுத்து இருந்தது.அதன்பின் ரோஸ் டெய்லருடன் கேப்டன் பிரண்டன் மெக்குல்லம் ஜோடி சேர்ந்தார்.மெக்குல்லம் 23 ரன் எடுத்திருந்தபோது கோலி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். சிறப்பாக விளையாடிய ரோஸ் டெய்லர் சதம் அடித்தார். கடந்த 4–வது போட்டியிலும் அவர் சதம் அடித்திருந்தார். இது அவருக்கு 10–வது சதமாகும்.ரோஸ் டெய்லர் 102 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதில் 10 பவுண்டரி, 1 சிக்சர் அடங்கும். அப்போது ஸ்கோர் 5 விக்கெட்டுக்கு 274 ரன்னாக இருந்தது.அதன்பின் ரோஞ்ச், நீசம் ஜோடி அதிரடியாக விளையாடியது. கடைசி 2 ஓவரில் 29 ரன் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 303 ரன் குவித்தது.

NZ Inning

Batsman R B M 4s 6s S/R
Guptil M. c Shami M. b Aaron V. 16 35 53 2 0 45.71
Ryder J. c Rahane A. b Kumar B. 17 26 32 1 1 65.38
Williamson K. c Rahane A. b Aaron V. 88 91 118 8 1 96.70
Taylor R. c Dhawan S. b Shami M. 102 106 149 10 1 96.23
McCullum B. c Sharma R. b Kohli V. 23 18 29 1 1 127.78
Neesham J. not out 34 19 32 3 2 178.95
Ronchi L. not out 11 5 10 2 0 220.00
Extras: (w 5, b 1, lb 6) 12
Total: (50 overs) 303 (6.1 runs per over)

Bowler O M R W E/R
Shami M. 10 3 61 1 6.35
Kumar B. 8 0 48 1 6.32
Aaron V. 9.4 0 60 2 6.38
Ashwin R. 6 0 37 0 6.61
Jadeja R. 9 0 54 0 6.28
Kohli V. 6.6 0 36 1 5.45

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி