செய்திகள்,திரையுலகம் ‘டி டே’ டப்பிங் படத்துக்கு எதிராக ஸ்ருதிஹாசன் வழக்கு…

‘டி டே’ டப்பிங் படத்துக்கு எதிராக ஸ்ருதிஹாசன் வழக்கு…

‘டி டே’ டப்பிங் படத்துக்கு எதிராக ஸ்ருதிஹாசன் வழக்கு… post thumbnail image
சென்னை:-கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹிந்தியில் ரிலீசான படம் தான் ‘டி-டே’. இந்தப் படத்தில் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் ஒரு பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார். அதனால் படத்தில் அவர் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்துள்ளார்.

இதற்காகவே இந்தப் படத்தை மும்பை ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு பார்த்தனர். அப்படிப்பட்ட இந்தப்படம் தான் தற்போது ‘தாவூத்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்து ரிலீசாக உள்ளது.இதற்கான விளம்பரங்கள் நேற்றைய நாளிதழ்களில் வந்தன. அதில் ஸ்ருதிஹாசன் ஹீரோ முதுகின் மேலே எந்த ஆடையும் அணியாமல் படுத்துக் கிடப்பது போல போட்டோ இடம் பெற்றிருந்தது.

இதனால் கடுப்பான ஸ்ருதிஹாசன் இதன் மூலம் தமிழ்ரசிகர்கள் மத்தியில் தனது இமேஜ் கெட்டுவிடுமே என பயந்து தற்போது அந்தப்படம் தமிழில் ரிலீசாகக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அதை தடை செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.“என்னுடைய பெர்மிஷன் இல்லாமல் டி-டே படத்தை தமிழில் ரிலீஸ் செய்யக்கூடாது. மீறி ரிலீஸ் செய்தால் அது என்னுடன் போட்ட ஒப்பந்தத்தை மீறியதாகும். அதனால் நான் அந்தப் படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளேன்” என்று ஸ்ருதி கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி