செய்திகள்,திரையுலகம் ஏப்ரல் 14ம் தேதி கமலின் ‘விஸ்வருபம் 2’?…

ஏப்ரல் 14ம் தேதி கமலின் ‘விஸ்வருபம் 2’?…

ஏப்ரல் 14ம் தேதி கமலின் ‘விஸ்வருபம் 2’?… post thumbnail image
சென்னை:-கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2‘ படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது அதன் விஷுவல் எபெக்ட் வேலைகள் நடந்து வருகிறது. இந்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் கமல், பட ரிலீஸ் தேதியை அறிவிக்கும் நிலையில் இருக்கிறார். படம் அனேகமாக ஏப்ரல் 14, தமிழ்ப்புத்தாண்டு அன்று ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

கமல், பூஜா குமாரின் ரொமான்ஸ் காட்சிகள் மட்டும் கொஞ்சம் பாக்கி இருப்பதாகவும், அந்த காட்சிகள் இந்த வாரத்தில் சென்னையில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பில் முடிந்துவிடும் என்றும் படக்குழுவினர் கூறுகின்றனர்.முதல் பாகத்திற்கு வந்தது போல இரண்டாம் பாகத்துக்கு எவ்வித பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதில் கமல் மிகவும் கவனமாக உள்ளார். மேலும் ஏப்ரல் மாதம் என்பது தேர்தல் நெருங்கிவரும் மாதமாக இருப்பதால் அரசியல் கட்சிகள் இந்த படத்தினை வைத்து அரசியல் லாபம் தேட முயற்சிப்பார்கள் என்றும் அதற்கு இடங்கொடுத்துவிடாமல் எவ்வித பிரச்சனையும் இன்றி படத்தை ரிலீஸ் செய்ய இப்பொழுதே முயற்சி எடுத்து வருகிறார் கமல்.

இந்த படத்தை ஆஸ்கார். வி.ரவிச்சந்திரனுடன் சேர்ந்து கமல் தயாரித்துள்ளார்.ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இசைவெளியீட்டு விழா வரும் பிப்ரவரி இறுதியில் நடக்கும் என தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி