ரஜினி, அஜித்துடன் மோதிய ஏழு வில்லன்களுடன் மோதும் ‘மீகாமன்’ ஆர்யா…

விளம்பரங்கள்

சென்னை:-ஐந்து ஹீரோயின்களை வைத்து ‘நான் அவனில்லை’ என்ற படத்தை தயாரித்த நேமிசந்த் ஜபக் என்ற நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பான மீகாமன் படத்தில் ஏழு வில்லன் நடிகர்களை நடிக்க வைத்துள்ளது.

ஆர்யா, ஹன்சிகா நடிக்கும் மீகாமன் என்ற திரைப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே முன் தினம் பார்த்தேனே, மற்றும் தடையற தாக்க ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர். இவர் இயக்கும் இந்த படத்தில் மொத்தம் ஏழுவில்லன்கள் கோவாவில் கூட்டு சேர்ந்து கொலை கொள்ளைகளை நடத்தி வருகிறார்கள். இவர்களை பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக ஆர்யா நடிக்கிறார்.

இந்த படத்தில் நடிக்கும் ஏழு வில்லன்களின் பெயர்கள் வருமாறு:-

1. பாபா உள்பட பல படங்களில் வில்லனாக நடித்த ஆஷிஷ் வித்யார்த்தி.
2. வேட்டை படத்தில் நடித்த அசோக் ராணா.
3. பில்லா 2 படத்தில் அஜீத்துடன் மோதிய சுதன்ஷு பாண்டே
4. பாண்டியநாடு படத்தில் விஷாலுக்கு எதிராக நடித்த ஹரீஷ்.
5. தடையற தாக்க படத்தின் வில்லன் காந்தி
6. திருமலை, சந்திரமுகி ஆகிய படங்களில் நடித்த அவினாஷ்
7. பாலாவின் பிதாமகன் படத்தில் கலக்கிய மகாதேவன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: