நான் யாருன்னு தலைமைக்கு காண்பிப்பேன்-அழகிரி…

விளம்பரங்கள்

சென்னை:-திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரிக்கு இன்று பிறந்தநாள். அவர் இன்று தனது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால் திமுக தலைமை பதற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

கட்சியை விட்டு நீக்கியதால் கடுங்கோபத்தில் இருக்கும் மு.க.அழகிரி “என்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதால் சந்தோஷப்படுறாங்க. இவன் தொலைஞ்சான்னு நினைக்கிறாங்க. ஆனா, நான் யாருன்னு தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னால காண்பிப்பேன். நான் சொல்லப்போறதுதான் தேர்தல் முடிவையே தீர்மானிக்கும்’ என்றும், ‘ஸ்டாலினைச் சுற்றிலும் இருப்பவர்கள் இதுவரை என்னென்ன முறைகேடுகள் செய்துள்ளார்கள் என்பது எனக்குத் தெரியும். அந்த முறைகேடுகளை வெளிப்படுத்துவேன்” என்றும் தனது ஆதரவாளர்களிடம் கூறிவருகிறார். அதோடு இன்றைய பிறந்தநாளில் ஒரு முக்கிய அறிவிப்பையும் கொடுக்க இருப்பதாக அழகிரி தரப்பில் இருந்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

இதனிடையே ஸ்டாலினை சமாதானப்படுத்த கருணாநிதியின் மகள் செல்வியும் அவரது கணவர் செல்வமும் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்ததாம். அழகிரி கட்சியில் இருந்தா தான் வெளியேறப்போவதாக ஸ்டாலின் மிரட்டி வருவதால் திமுக தலைமை தற்போது என்ன செய்வது என தெரியாமல் குழம்பி வருகிறது. இந்த குழப்பம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: