நமீதாவைப் பார்க்க சென்றவர்கள் விழுந்தடித்து ஓட்டம்…

விளம்பரங்கள்

சென்னை:-தனது ஆஜானபாகு உடம்பை மூலதனமாகக் கொண்டு சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் நமீதா. பின்னர் சரியான வாய்ப்புகள் இல்லாததால் இளைஞன் என்ற படத்தில் வில்லியாக அவதாரமெடுத்தார். ஆனால் அந்த முயற்சி நமீதாவுக்கு பலன் கொடுக்கவிலலை. இருப்பினும் கோடம்பாக்கத்திலேயே முகாமிட்டு சின்னத்திரையில் முகம் காட்டியபடி, கடை திறப்பு விழாக்களில் கலந்து கொண்டுபொழுதை கழித்து வருகிறார்.

இதற்கிடையே தனது பெயரளவில் ஏதாவது பரபரப்பு இருந்து கொண்டேயிருக்க வேண்டும் என்பதற்காக, தற்போதைக்கு அரசியல் என்ற அஸ்திரத்தை கையிலெடுத்திருக்கும் நமீதா, தேசிய அளவிலான ஒரு பிரதான கட்சியில் தான் இணையப்போவதாகவும் ஒரு செய்தியை காத்துவாக்கில் கசிய விட்டுக்கொண்டிருக்கிறார். இந்தமாதிரி ஏதாவது பரபரப்பு செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்தாலும் அவருக்கு புதிதாக படங்கள் கிடைத்தபாடில்லை.

அதனால் இப்போது கடின உடற்பயிற்சி மூலம் உடல் எடையை 25 கிலோ வரை குறைத்திருப்பதாக புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் நமீதா. அதை நம்பி அவரை பார்க்கச்சென்றவர்களுக்கு பெரிய அதிர்ச்சியாம். காரணம், முன்பு இருந்ததற்கு கடுகளவும் குறையாத அதே கம்பீரமான தோற்றத்துடன் காட்சி கொடுக்கிறாராம் நமீதா. அதைப்பார்த்து நமீதாவ பார்க்கிறதுக்கு பிந்துகோஷ்க்கே அக்கா மாதிரியில்ல இருக்கு என்று வீடுதேடி சென்றவர்கள் விழுந்தடித்து ஓடி வந்து விட்டார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: