திரிஷாவை ஆன்ட்டி என அழைத்த ஹீரோ…

விளம்பரங்கள்

சென்னை:-திரிஷாவுக்கு புதிய படவாய்ப்புகள் இல்லையென்றபோதும், கெட்டிமேளம் கொட்டும் எண்ணமில்லை. மாறாக, அடுத்த ரவுண்டுக்கு அடித்தளம் போடவே ஆசைப்படுகிறார். அதனால் மேல்தட்டு நடிகர்களிடம் இனிமேல் தனது பாச்சா பலிக்காது என்பதால், புதுவரவு நடிகர்களை அட்டாக் பண்ணி வருகிறார்.

தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் இரண்டு வாரிசு நடிகர்களிடம் நட்புக்கரம் நீட்டிய நடிகை, பேச்சுவாக்கில் அவர்களுடன் டூயட் பாட வேண்டும் என்ற தனது ஆசையை அவுட் பண்ணியிருக்கிறார். ஆனால், அதைக்கேட்டு ஆடிப்போன ஒரு இளவட்ட நடிகர், ஆன்ட்டி நீங்க எங்க அப்பாவுக்குத்தான் பொருத்தமாக இருப்பீங்க. நானெல்லாம் ரொம்ப சின்ன பையன் ஆன்ட்டி என்று வார்த்தைக்கு வார்த்தை ஆன்ட்டியை யூஸ் பண்ணி திரிஷாவை நோஸ்கட் செய்து விட்டாராம்.

இதனால், ஏதோ கேட்கக்கூடாத வார்த்தையை கேட்டு விட்டது போல் காதுகளை பொத்திக்கொண்டே ஓடிவந்து விட்ட நடிகை, இப்போது இளவட்ட நடிகர்களைக்கண்டாலே நாலு அடி தள்ளியே நிற்கிறாராம். அவர்களும் தன்னைப்பார்த்து ஆன்ட்டி என்று அழைத்து விடக்கூடாதே என்ற அச்சம்தான் இதற்கு காரணமாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: