செய்திகள்,விளையாட்டு நியூசிலாந்து வெற்றிக்கு 279 ரன்கள் இலக்கு…

நியூசிலாந்து வெற்றிக்கு 279 ரன்கள் இலக்கு…

நியூசிலாந்து வெற்றிக்கு 279 ரன்கள் இலக்கு… post thumbnail image
ஹாமில்டன்:-நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியிலும் தோல்வியடைந்தது. மூன்றாவது போட்டி ‘டை’ ஆனது. இதையடுத்து இந்திய அணி 2–0 என தொடரில் பின்தங்கியுள்ளது. இரு அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணியில் அதிரடி வீரர் கோரி ஆண்டர்சன், வேகப்பந்து வீச்சாளர் மெக்லீனகன் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு மில்ஸ், நீஷன் வாய்ப்பு பெற்றனர். இந்திய அணியில் மோசமான பார்ம் காரணமாக துவக்க வீரர் ஷிகர் தவான், ரெய்னா ஆகியோர் நீக்கப்பட்டு, ஸ்டுவர்ட் பின்னி அறிமுக வீரராக இடம் பிடித்தார். அம்பதி ராயுடு அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்திய அணிக்கு எப்போதும் மூன்றாவது வீரராக களமிறங்கும் விராத் கோஹ்லி இம்முறை துவக்க வீரராக வந்தார். நல்ல ‘பார்மில்’ உள்ள இவர் வெறும் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். ரகானே (3) நிலைக்கவில்லை. ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், எதிர்முனையில் அவ்வப்போது பவுண்டரி அடித்த ரோகித் சர்மா, நீஷன் வேகத்தில் சிக்சர் அடித்து, தனது 21வது அரைசத்தை பூர்த்தி செய்தார்.இவருக்கு ‘கம்பெனி’ கொடுத்த அம்பதி ராயுடு (37) பெனிட் வேகத்தில் அவுட்டானார். பின் கேப்டன் தோனியுடன் ஜோடி சேர்ந்த ரவிந்திர ஜடேஜா அதிரடியாக ரன்கள் சேர்த்தார். நீஷம் வேகத்தில் பவுண்டரி அடித்த கேப்டன் தோனி இத்தொடரில் தொடர்ந்து மூன்றாவது அரைசதம் அடித்தார்.

எதிர்முனையில் தன்பங்கிற்கு மில்ஸ், பெனிட் பந்தில் பவுண்டரி அடித்த ஜடேஜா, வில்லியம்சன்னை சிக்சருக்கு அனுப்பினார். தொடர்ந்து பெனிட் பந்தில் பவுண்டரி அடித்த இவர் ஒருநாள் அரங்கில் தனது 8வது அரைசதத்தை எட்டினார். இந்த ஜோடி தொடர்ந்து ரன்குவிக்க, இந்திய அணி 50 ஓவர் முடிவில், 5 விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்தது. தோனி (79), ரவிந்திர ஜடேஜா (62) அவுட்டாகாமல் இருந்தனர்.

IND – 1st Inning

Batsman R B M 4s 6s S/R
Sharma R. c Ronchi L. b Williamson K. 79 94 132 6 4 84.04
Kohli V. c Neesham J. b Southee T. 2 10 14 0 0 20.00
Rahane A. c Southee T. b Mills K. 3 8 23 0 0 37.50
Rayudu A. c Ronchi L. b Bennett H 37 58 66 3 2 63.79
Dhoni M. not out 79 73 112 6 3 108.22
Ashwin R. c Bennett H. b Southee T. 5 3 4 1 0 166.67
Jadeja R. not out 62 54 79 8 2 114.81
Extras: (w 7, lb 4) 11
Total: (50 overs) 278 (5.6 runs per over)
Bowler O M R W E/R
Mills K. 9.6 2 42 1 4.38
Southee T. 9.6 0 36 2 3.75
Bennett H. 8.6 0 67 1 7.79
Neesham J. 7.6 0 59 0 7.76
McCullum N. 9.6 0 44 0 4.58
Williamson K. 2.6 0 26 1 10.00

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி