மருதநாயகம் படத்தை தொடங்க கமல்ஹாசன் விருப்பம்…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் கமல்ஹாசனால் கடந்த 1997ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட ‘மருதநாயகம்‘ ஒரு வரலாற்றுத் திரைக் காவியமாகச் சித்தரிக்கப்பட்டது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முகமது யூசுப் கான் என்ற வீரரைப் பற்றிய கதை இதுவாகும்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் தயாரிக்கப்படுவதாக இருந்த இந்தத் திரைப்படம் பின்னர் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பொருளாதாரப் பிரச்சினையும், மற்ற சில வெளிவராத பிரச்சினைகளும் இந்தப் படத்தைக் கிடப்பில் போட்டன.தற்போது ‘விஸ்வரூபம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பில் கமலஹாசன் அதன் இரண்டாவது பாகத்தையும் தயாரித்து வெளியிடும் இறுதிக் கட்ட வேலைகளில் உள்ளார்.

இந்தப் படத்தின் வெற்றி அவருக்கு மீண்டும் மருதநாயகத்தை இயக்கும் எண்ணத்தை உருவாக்கியுள்ளது. அவரது வெளிநாட்டு நண்பர்கள் பலரும் அந்தப் படத்திற்குத் தேவையான பொருளுதவியை அளிப்பதாகக் கூறியுள்ளது அவரது ஆர்வத்தினை மேலும் தூண்டியுள்ளது. அதனால், தன்னுடைய தீவிரமான ரசிகர்களுக்காக ‘மருதநாயகம்’ படத்தினைத் தயாரிக்கும் முயற்சியில் அவர் மீண்டும் ஈடுபடக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: