கேப்டன் தோனியின் சாதனை…

கேப்டன் தோனியின் சாதனை… post thumbnail image
ஆக்லாந்து:-இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி ‘டை’யில் முடிந்தது. இதன்மூலம் டை ஆன 4 போட்டிகளில் விளையாடிய முதல் கேப்டன் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார்.

2011ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின்போது பெங்களூரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும், அதே ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும், பிப்ரவரி 2012ம் ஆண்டு அடிலெய்டில் இலங்கைக்கு எதிரான போட்டியிலும் இந்தியா சமன் செய்திருந்தது. இந்த மூன்று போட்டிகளிலும் டோனி இடம்பெற்றிருந்தார்.

ரிச்சி ரிச்சர்ட்சன் (வெஸ்ட் இண்டீஸ்), ஸ்டீவ் வாக் (ஆஸ்திரேலியா) மற்றும் ஷான் போலாக் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் டை ஆன 3 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக இப்போது போட்டி ‘டை’யில் முடிந்துள்ளது. இந்தியா இதுவரை 7 போட்டிகளையும், நியூசிலாந்து 6 போட்டிகளையும் டை செய்துள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி