ரஜினியை ‘வாடா’ என அழைத்த குஷ்பு…

விளம்பரங்கள்

சென்னை:-90களின் முன்னணி ஹீரோயின்களான குஷ்பு, கௌதமி இருவரும் கலந்து கொண்ட ‘காஃபி வித் டிடி’ நிகழ்ச்சி நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

குஷ்பு, கௌதமி இருவரும் அவர்களது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.இருவருமே அவர்களுக்குப் பிடித்த நடிகர் கமல்ஹாசன்தான் என்பதை வெளிப்படையாகத் தெரிவித்தனர்.ரஜினி பற்றிய அவர்களது கருத்தையும் தெரிவித்தனர்.
கௌதமி பேசும் போது, “எவ்வளவு பெரிய ஹீரோங்கறத அவர் காட்டிக்கவே மாட்டாரு. படப்பிடிப்பின் போது மிகவும் எளிமையாக இருப்பார். எல்லார் கூடவும் சகஜமா பழகுவாரு. ஏதாவது சின்ன பிரச்சனை வந்தால் கூட அதை ஈஸியா முடிச்சிடுவாரு. எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்,” என்றார்.

குஷ்பு பேசும் போது ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தைப் பற்றிக் கூறினார்.“நான் தமிழ் சினிமால நடிக்க வந்த புதுசு. தமிழ் கத்துக் கொடுக்கறம்னு எதையாவது தப்புத் தப்பா கத்துக் கொடுத்துடுவாங்க. அப்படித்தான் ‘வாடா’ன்னா ‘குட் மார்னிங்’னு அர்த்தம்னு சொல்லிக் கொடுத்தாங்க.ரஜினி சார் கூட ஷுட்டிங் நடக்கிற நாளன்னைக்கு அவர் வரும் போது, நான் “வாடா”ன்னு சொன்னன். அவ்வளவுதான் மொத்த யூனிட்டுமே ஸ்தம்பிச்சி நிக்குது. பக்கத்துல இருக்கிற பிரபு சார் என்ன சொல்ற…என்ன சொல்ற…ன்னு கேக்கறாரு.

அப்புறம் ஒரு மாதிரி, நான் அவர் கிட்ட மராத்தில பேசி சமாளிச்சி நடந்ததைச் சொன்னன். அவர் விழுந்து விழுந்து சிரிச்சாரு,” என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: