நேருக்கு நேர் மோதும் தமிழ் இயக்குனர்கள்…

விளம்பரங்கள்

மும்பை:-தமிழில் ஹிட்டான துப்பாக்கி படத்தை இந்தியில் ஹாலிடே என்ற டைட்டிலில் இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதில் விஜய் நடித்த கேரக்டரில் அக்‌ஷய்குமாரும், காஜல் அகர்வால் கேரக்டரில் சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கிறார்கள்.

அதைப்போல,பிரபு தேவா டைரக்ட் செய்து வரும் படம் ஆக்ஷன் ஜாக்ஷன். இதில் அஜய்_தேவ்கனும், சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் யாமி கவுதம், மானஸ்வி ஆகியோரும் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.

இந்த இரண்டு படங்களும் வருகிற ஜுன் 6ந் தேதி ஒரே நாளில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெரிய ஹீரோக்கள், இரண்டு தமிழ் டைரக்டர்கள், ஒரே ஹீரோயின் என இப்போது நேருக்கு நேர் போட்டி இப்போதே களைகட்ட ஆரம்பித்திருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: