தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்தது இந்தியா…

விளம்பரங்கள்

துபாய்:-நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தொடர்ந்து இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்ததையடுத்து, ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்தது.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு முன்னதாக 119 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் இருந்தது. ஆஸ்திரேலியா 118 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தது. இந்தியா 2-வது போட்டியில் தோல்வியடைந்ததால், 2 புள்ளிகள் சரிந்து 117 புள்ளிகளுடன் பின்தங்கியது. ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு வந்தது.இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் அந்த அணி 2 புள்ளிகள் சரிந்து மொத்தம் 116 புள்ளிகளுடன் பின்தங்கியது. இந்தியா மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது.

ஆனால், இந்த நிலையை தக்க வைக்க வேண்டுமானால், நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடைபெறும் 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும். தோல்வியடைந்தால் மீண்டும் முதலிடத்தை இழக்கும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: