அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் சூர்யாவுக்கா?ஆரம்பமானது பிரச்சனை…

விளம்பரங்கள்

சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடிக்கும் ‘அஞ்சான்’ படத்திற்காக வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தியில், சூர்யாவை “தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார்” என குறிப்பிட்டிருந்தனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை , ஏன் இந்தியாவைப் பொறுத்தவரை உலகம் முழுவதும் உள்ள தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் அனைவரிடத்திலும் ஒரே சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த் மட்டுமே.ஒரு தமிழ் நடிகர் உலக அளவில் புகழ் பெற்றிருக்கிறார் என்றால் அது ரஜினி மட்டுமே.இப்போதைய தலைமுறை நடிகர்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற விவாதம் சில வருடங்களுக்கு முன் ஆரம்பமான போதே, விஜய், அஜித், சூர்யா போன்றவர்கள் கூட ஒரே சூப்பர் ஸ்டார் தான், அதுவும் ரஜினிகாந்த் மட்டுமே என்று அந்த பேச்சிலிருந்தே அவர்களை விலக்கிக் கொண்டனர்.

ஆனால், இப்போது மீண்டும் இப்படி ஒரு ‘பப்ளிசிட்டி’ நாடகத்தை ‘அஞ்சான்’ படத்தை விளம்பரப்படுத்துவதில் கையாள ஆரம்பித்திருக்கிறார்கள்.இது ரஜினி ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சில தீவிர ரஜினி ரசிகர்களிடம் நாம் இதுபற்றிய கருத்தைக் கேட்டறிந்தோம்.அவர்களனைவரும் ஒட்டு மொத்தமாக ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் இனி தமிழ் சினிமாவில் வருவதற்கே சாத்தியமில்லை. அந்த பட்டத்துக்குரியவர் ரஜினிகாந்த் மட்டுமே என்றனர்.ஆனால், இப்போது திடீரென இப்படி ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ யுத்தத்தை ஆரம்பித்து வைக்க வேண்டிய அவசியமென்ன ?

சமீப காலமாக திரைப்படங்களை அதனுடைய தரத்தில் ஓட வைப்பதை விட, பப்ளிசிட்டிகளால் ஓட வைக்க முயற்சிப்பது தான் காரணம்.இந்த வாரம் வெளிவந்த ஒரு வாரப் பத்திரிகையில் கூட லிங்குசாமி, “என்னுடைய ஹீரோக்களின் ஹீரோயிசத்துக்கு முன்னுதாரணமே ரஜினிகாந்த்தான்,” என சொல்லியிருக்கிறார்.
அப்படியிருக்க, இந்த சூப்பர் ஸ்டார், அதிலும் ‘தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார்’ என்ற அடைமொழியை சூர்யாவே விரும்பவும் மாட்டார், ஏற்கவும் மாட்டார் என்பது நமக்கு புலப்படும் விஷயமாகத் தோன்றுகிறது.

இதன் மூலம் ரஜினி ரசிகர்களிடத்தில் சூர்யாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயல்வதும், புதுப் புது பட்டங்கள் கொடுப்பதன் மூலம் அந்தந்த ஹீரோக்களை வளைத்துப் போட முயற்சிக்கும் வியாபாரிகளின் தந்திரம் என்றே நாம் கொள்ள வேண்டும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: